பாளை.யில் திருக்கோயில் பணியாளர்கள் போராட்டம்
தமிழ்நாடு திருக்கோயில் பணியாளர்கள் சங்கக் கூட்டமைப்பு சார்பில் பாளையங்கோட்டையில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு திருக்கோயில் பணியாளர்கள் சங்கக் கூட்டமைப்பு சார்பில் பாளையங்கோட்டையில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருக்கோயில் பணியாளர்களுக்கு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பணிக்கொடை வழங்க வேண்டும். 7ஆவது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதிய உயர்வு உடன் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களில் தற்காலிக பணியாளர்களுக்கு பணிநிரந்தரம் வழங்க வேண்டும்.
ஊதிய முரண்பாடுகளை அகற்றி அரசாணைப்படி சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. திருக்கோயில் தொழிலாளர் யூனியன் மாநில பொதுச்செயலர் ஏ. ராமலிங்கம், கோட்டச்செயலர் எஸ். வெங்கடேசன், மண்டல பொறுப்பாளர் எம். மாரிமுத்து, பொதுச்செயலர் எஸ். ஜீவானந்தம் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்து சமய அறநிலையத்துறைக்கு கீழ் உள்ள கோயில்களின் பணியாளர்கள் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.