FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

இலவச வீட்டுமனைப் பட்டா கோரி நெல்லை ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

இலவச வீட்டுமனைப் பட்டா கோரி,  வண்ணார் சமுதாய முன்னேற்ற நலச் சங்கத்தினர் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்

Updated On : 26 ஜூன் 2018, 7:37 am IST
பகிர்:

இலவச வீட்டுமனைப் பட்டா கோரி,  வண்ணார் சமுதாய முன்னேற்ற நலச் சங்கத்தினர் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமின்போது,  அலுவலகத்தை  முற்றுகையிட்டனர்.
  பின்னர், ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷிடம் அவர்கள் அளித்த மனு: நீண்ட காலமாக வாடகை வீட்டில் குடியிருக்கும் வண்ணார் சமுதாய மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும், சலவைத் தொழில் செய்யும் அந்த மக்களுக்கு இலவச தேய்ப்புப் பெட்டி வழங்க வேண்டும்.
 திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கத்தினர் அளித்த மனு: திருநெல்வேலி மாநகராட்சியில் சுயஉதவிக் குழு தொழிலாளர்கள் சுமார் 600 பேர் துப்புரவு பணி செய்து வருகின்றனர்.   அவர்களுக்கு ஒரு நாள் ஊதியமாக ரூ.624 வழங்க வேண்டும்; 2 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; வருங்கால வைப்பு நிதியை மாநகராட்சியே பிடித்தம் செய்ய வேண்டும்; இஎஸ்ஐ திட்டத்தில் சேர்க்க வேண்டும்; மழைக்கோட், காலணி, சீருடை, கை உறை வழங்க வேண்டும்; ஊதியத்துடன் வார முறை, பண்டிகைக் கால விடுமுறை அளிக்க வேண்டும். 
ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலர் கு.கி.கண்ணன் அளித்த மனு: திருநெல்வேலி நீதிமன்றம் எதிரே விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டி வீரன் மணிமண்டபம் பகுதியில் எஞ்சியுள்ள 50 சென்ட்  கல்வெட்டான் குழியை மூடிவிட்டு கழிப்பிடம், தண்ணீர் வசதி, பூங்கா அமைக்க  மாவட்ட ஆட்சியராக இருந்த சந்தீப் நந்தூரி ரூ. 82 ஆயிரம் மதிப்பீட்டில் திட்ட மதிப்பீடு தயார் செய்து தமிழக அரசுக்கு அனுப்பினார். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பாளையங்கால்வாய்: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ்.கே.எம்.சிவக்குமார் அளித்த மனு: தாமிரவருணி ஆற்றின் ஐந்தாவது அணைக்கட்டு பழவூர் அணைக்கட்டாகும். இந்த அணைக்கட்டிலிருந்து 9,500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன. ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் பாளையங்கால்வாயில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும்.
ஆனால், நிகழாண்டு பாளையங்கால்வாயில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதாகக் கூறி காலம் தாழ்த்துகிறார்கள். அப்பணியை விரைந்து முடிக்கவும், ஜூன் இறுதிக்குள் பாளையங்கால்வாயில் தண்ணீர் திறக்கவும் ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments