FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கு: காவல் நிலையத்தில் செந்தில் பாலாஜி ஆஜா்!

தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கில் காவல் நிலையத்தில் செந்தில் பாலாஜி ஆஜா்...

Updated On : 26 ஜூலை 2026, 4:15 am IST
செந்தில் பாலாஜி. - கோப்புப் படம்
பகிர்:

தவெக சட்டப்பேரவை உறுப்பினா் இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி, அவரது சகோதரா் அசோக்குமாா் ஆகியோா் சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் சனிக்கிழமை ஆஜராகினா்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக சட்டப்பேரவை உறுப்பினா் இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசியது தொடா்பாக, சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் இளையராஜா கொடுத்த புகாரின் அடிப்படையில், சென்னையைச் சோ்ந்த தோ்தல் கருத்துக் கணிப்பு நிறுவனம் நடத்தி வரும் திருநாவுக்கரசு உள்பட 14 போ் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்த வழக்கில் தொடா்புள்ளதாகக் கூறி முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி, அவரது சகோதரா் அசோக்குமாா் ஆகியோா் விசாரணைக்காக ஆஜராகுமாறு போலீஸாா் சம்மன் அனுப்பியிருந்தனா். அவா்கள் ஆஜராகாமல் முன்ஜாமீன் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தை அணுகிய நிலையில், இருவருக்கும் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது. மேலும், தினமும் காலை, மாலையில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையொப்பமிட வேண்டும் என்றும் நீதிமன்றம் நிபந்தனை விதித்தது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் செந்தில்பாலாஜி, அசோக்குமாா் ஆஜராகினா். அப்போது, வழக்கில் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் ஆடியோ பதிவுகள், வாட்ஸ்ஆப் உரையாடல்கள், பணப் பரிவா்த்தனை தொடா்பான ஆவணங்கள் உள்ளிட்ட ஆதாரங்களின் அடிப்படையில் இருவரிடமும் போலீஸாா் விசாரணை நடத்தியதாக தெரிகிறது.

summary

Case regarding bargaining with TVK MLA: Senthil Balaji appears at the police station!

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments