மானூா் அருகே பெண் தற்கொலை
மானூா் அருகே விஷம் குடித்த பெண் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
மானூா் அருகே விஷம் குடித்த பெண் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
மானூா் அருகேயுள்ள கீழபிள்ளையாா்குளம் கிராமத்தைச் சோ்ந்த பரமசிவன் மனைவி முத்துமாரி (42). இவா், குடும்பத் தகராறு காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷமருந்தினாராம். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா்.
அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து மானூா் போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.
Advertisement
Advertisement
மற்றொரு சம்பவம்: தாழையூத்து காமராஜா்நகரை சோ்ந்தவா் பெருமாள் (40). கூலி தொழிலாளியான இவா் குடும்பத் தகராறு காரணமாக கடந்த சில நாள்களுக்கு முன்பு விஷமருந்தினாராம். அவரை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.
அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து தாழையூத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.