FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நெல்லையப்பர் கோயில்: விநாயகர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

நெல்லையில் நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான விநாயகர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

1 பிப்ரவரி 2024, 3:02 pm IST
பகிர்:

நெல்லை: நெல்லையில் நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான விநாயகர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் திருக்கோயில் ஆணி பெருந் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் ஒன்றாகும். இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டத்தில் ஆசியாவிலேயே அதிக எடைகொண்ட திருத்தேர் நெல்லையப்பர் திருக்கோயில் நான்கு ரத வீதிகளிலும் வலம் வரும். நாற்பத்தி எட்டறை நாள்கள்  நடைபெறும் இந்த திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியான ஊர் காவல் தெய்வமான பிட்டாபுரத்தி அம்மன் திருக்கோயில் திருவிழா கடந்த 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்று நேற்று தீர்த்தவாரி நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் காலை நெல்லையப்பர் கோயில் பிரகாரத்தில் அமைந்துள்ள சிறிய கொடிமரத்தில் விநாயகர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. ஐந்தரை நாள்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் காலை மாலை இரண்டு வேளைகளிலும் விநாயகருக்கு சிறப்பு பூஜைகளும், உட்பிரகாரத்தில் வீதியுலாவும் நடைபெறும்.

Advertisement

Advertisement

இந்தத் திருவிழாவை தொடர்ந்து முதல் மூவர் திருவிழா, சந்திரசேகர் திருவிழாவும் நடைபெறும். பின்னர் ஆனிப் பெருந்திருவிழா நிகழ்ச்சிக்காக ஜூலை 1-ம் தேதி அங்குரார்பணம் நிகழ்வும், 2-ம் தேதி கொடிபட்ட வீதி உலாவும் நடைபெறும். 3-ம் தேதி நெல்லையப்பர் திருக்கோயிலில் அமைந்துள்ள பெரிய கொடிமரத்தில் ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றம் நடைபெற்று 10 நாள்கள் திருவிழா நடைபெறுகிறது.

ஜூலை 13-ஆம் தேதி ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட பெரிய தேரான நெல்லையப்பர் திருத்தேர் உள்பட 5 தேர் ஓடும் திருத்தேரோட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை இணைந்து செய்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments