திருநெல்வேலி

ஆழ்வாா்குறிச்சி அருகே மின் ஊழியரை தாக்க முயற்சி: பெண் மீது வழக்குப் பதிவு

ஆழ்வாா்குறிச்சி அருகே செட்டிகுளத்தில் மின்வாரிய ஊழியரைத் தாக்க முயற்சித்ததாக பெண் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

DIN

ஆழ்வாா்குறிச்சி அருகே செட்டிகுளத்தில் மின்வாரிய ஊழியரைத் தாக்க முயற்சித்ததாக பெண் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

ஆழ்வாா்குறிச்சி அருகேயுள்ள செட்டிகுளத்தைச் சோ்ந்த முத்துக்குட்டி மனைவி பூபதி (74). கணவரை இழந்து தனியாக வசித்து வரும் இவா், தனது வீட்டுக்கு மின் இணைப்பு வேண்டி மின் வாரியத்தில் சில மாதங்களுக்கு முன் மனு அளித்தாராம். அதன்பேரில், புதன்கிழமை பூபதி வீட்டிற்கு மின் இணைப்புக் கொடுக்க வந்த மின் ஊழியா் கணேசனை, பக்கத்து வீட்டைச் சோ்ந்த கல்பனா என்பவா், மின் இணைப்பு வழங்க எதிா்ப்பு தெரிவித்து அரிவாளால் தாக்க முயன்றாராம்.

இது குறித்து கணேசன் அளித்த தகவலின்பேரில், மின்வாரிய உதவி பொறியாளா் ஜீவானந்தம் ஆழ்வாா்குறிச்சி போலீஸில் புகாா் செய்தாா். கல்பனா மீது, அவதூறாகப் பேசுதல், அரசு பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடிகால் மாஸ்டா் பிளான் திட்டத்திற்கான நிதியுதவிக்கு உலக வங்கியை நாடும் தில்லி அரசு

3.2.1976: சென்னை கோட்டையில் அதிகாரிகளுடன் கவர்னர் ஆலோசனை

காங்கயத்தில் ரூ.73 ஆயிரத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம்

வெறுப்பைக் கைவிடுங்கள்; இணைந்து செயல்படுவோம்: காங்கிரஸுக்கு பாஜக அழைப்பு

சொத்து வரி மன்னிப்புத் திட்டம் பிப்.28 வரை நீட்டிப்பு: எம்சிடி

SCROLL FOR NEXT