FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தமிழ்நாடு பட்ஜெட்! 150 நிமிடங்கள் உரையாற்றிய அமைச்சர் மரிய வில்சன்!

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து அமைச்சர் மரிய வில்சன் பேசியது பற்றி...

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 12:33 pm IST
நிதியமைச்சர் மரிய வில்சன் - TN Assembly
பகிர்:

தமிழ்நாடு பட்ஜெட்டை தாக்கல் செய்து முதல்முறையாக உரையாற்றிய நிதியமைச்சர் மரிய வில்சன், சுமார் 150 நிமிடங்கள் பேசினார்.

தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள தவெக அரசு, 2026 - 27ஆம் நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட்டை முதல்முறையாக இன்று தாக்கல் செய்தது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் மரிய வில்சன், கிட்டத்தட்ட 150 நிமிடங்கள் உரையாற்றினார்.

Advertisement

Advertisement

திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவீன மிதிவண்டிகளுடன் தலைக்கவசம், கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி, இலவச ஆடுகள் உள்ளிட்ட திட்டங்களை அறிவித்தார்.

பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ. 44,527 கோடி, உயர் கல்வித்துறைக்கு ரூ. 8,393 கோடி, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறைக்கு ரூ. 17,150 கோடி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறைக்கு ரூ. 1,051 கோடி, சமூக நீதித் துறைக்கு ரூ. 3,937 கோடி, மகளிர் உரிமைத் துறைக்கு ரூ. 9,818 கோடி, மருத்துவத் துறைக்கு ரூ. 23,357 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், 2036 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக உயர்த்த அரசு உறுதியுடன் செயல்படும் என்றும் அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.

summary

Tamil Nadu Budget - Minister Maria Wilson delivered a 150-minute speech

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments