FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

திமுக ஆட்சியில் நானே லஞ்சம் கொடுத்தேன்! அமைச்சர் மரிய வில்சன்

திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக்கல்வித் துறை மீது அமைச்சர் மரிய வில்சன் குற்றச்சாட்டு...

நிதியமைச்சர் மரிய வில்சன் - TN
பகிர்:

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக்கல்வித் துறையில் கட்டாயப்படுத்தி பணம் பெற்றதாக அமைச்சர் மரிய வில்சன் குற்றம் சாட்டினார்.

கல்வி நிறுவனங்களிடமிருந்து பணம் பெற்றதாகவும் பாதிக்கப்பட்டவர்களில் தானும் ஒருவன் என்றும் கூறினார்.

பேரவையில் இன்று பேசிய அவர்,

Advertisement

Advertisement

"கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித் துறையில் சில இடங்களில் கட்டாயப்படுத்திதான் பணம் வாங்கியிருக்கிறார்கள். அதில் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். சிலர் இதற்கு ஆதாரம் கேட்கிறார்கள். நானே ஒரு சாட்சிதான்.

நான் சொல்லக்கூடாது என்றுதான் நினைத்தேன். வேறு வழியில்லாமல் சொல்கிறேன். முன்னாள் கல்வித் துறை அமைச்சர் இங்கு இல்லை.

நாளைக்கு வேண்டுமானால் அவர்கள் என் மீது அவதூறு வழக்கு தொடரட்டும். விசாரணை நடத்தட்டும்.

எந்த இடத்தில் எந்த நேரத்தில் எவ்வளவு வாங்கினீர்கள்? சிறுபான்மை கல்வி நிறுவனத்திற்கு எவ்வளவு வாங்கினீர்கள்? என்றெல்லாம் என்னால் சொல்ல முடியும்" என்று கூறினார்.

இதற்கு முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மரிய வில்சனே தான் லஞ்சம் கொடுத்ததாக ஒப்புக்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

"அமைச்சர் மரிய வில்சன் தனது பள்ளியை முறையாக நடத்தவில்லை. அவர் மீது கடந்த டிசம்பரில் வழக்கு போடப்பட்டுள்ளது. அமைச்சராக இருந்துகொண்டு அவர் லஞ்சம் கொடுத்தததாக கூறியதற்காக அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் கூறினார்.

summary

Money collection in the School Education Department during the DMK regime: Minister Maria Wilson

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments