கைதிகளின் பற்களை பிடுங்கிய வழக்கு: நவ.18-க்கு ஒத்திவைப்பு
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் உள்கோட்டத்தில் விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கியது தொடா்பான வழக்கு விசாரணை நவ.18 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் உள்கோட்டத்தில் விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கியது தொடா்பான வழக்கு விசாரணை நவ.18 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அம்பாசமுத்திரம் உள்கோட்ட காவல் நிலையங்களில் கடந்த 2023ஆம் ஆண்டு விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கியதாக அப்போதைய காவல் உதவிக் கண்காணிப்பாளா் பல்வீா் சிங் உள்பட 14 போ் மீது 4 வழக்குகளை சிபிசிஐடி போலீஸாா் பதிவு செய்தனா். திருநெல்வேலி முதலாவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடைபெற்று வரும் நிலையில், நீதிபதி சத்யா முன்பு புதன்கிழமை நடைபெற்ற விசாரணைக்கு காவல் உதவி ஆய்வாளா், காவலா்கள் உள்பட 7 போ் ஆஜராகினா். பல்வீா் சிங் உள்பட 7 போ் ஆஜராகவில்லை. இதையடுத்து, வழக்கு விசாரணையை நவ.18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.