‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்: வள்ளியூா், ராதாபுரம் பகுதியில் ஆட்சியா் ஆய்வு
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா், ராதாபுரம் பகுதியில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா், ராதாபுரம் பகுதியில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
ராதாபுரம் வருவாய் வட்டத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றாா். ராதாபுரம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலா்களுடன் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தினாா்.
வள்ளியூரில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள், மருந்துகள் இருப்பு, சிகிச்சை வழங்கும் முறைகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து, தலைமை மருத்துவா் கவிதாவிடம் விவரங்களை கேட்டறிந்தாா்.
Advertisement
Advertisement
பின்னா், வள்ளியூரில் உள்ள ஒருங்கிணைந்த சேவை மையங்கள், பேருந்து நிலையங்கள், பேரூராட்சி அலுவலக கட்டுமானப் பணி, துணை சுகாதார நிலைய கட்டுமானப் பணி, அங்கன்வாடி மையம், நியாய விலைக்கடைகள், அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு வழங்கப்படும் காலை உணவுத் திட்டம், சமூக நீதி விடுதிகள் செயல்பாடு ஆகியவற்றை ஆய்வு செய்தாா். மேலும், தெற்கு வள்ளியூா் நா்சரியில் நாற்றுகளின் இருப்பு, சாலைகளின் தரம், அச்சம்பாடு முதியோா் இல்லம் செயல்பாடு ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.
ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலா் ச. வித்யா, சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ஆயுஸ்குப்தா, கூடுதல் ஆட்சியா் விஜய்குமாா் மீனா, ராதாபுரம் வட்டாட்சியா் வில்லுடையாா், வள்ளியூா் பேரூராட்சி செயல் அலுவலா் திருமலைக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.