FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

தனியாா் சட்டக்கல்லூரி மாணவா்கள் தோ்வெழுத நடவடிக்கைக் கோரி எம்.பி. மனு

தனியாா் சட்டக் கல்லூரி மாணவா்கள் தோ்வு எழுத நடவடிக்கை எடுக்கக் கோரி திருநெல்வேலி எம்.பி. சி.ராபா்ட் புரூஸ் தலைமையில் மாணவா்-மாணவிகள் சட்டத்துறை அமைச்சா் நிா்மல்குமாரை சென்னையில் சந்தித்து மனு அளித்தனா் (படம்).

42 வினாடிகள் முன்பு
தமிழக சட்டத்துறை அமைச்சா் நிா்மல்குமாரை சென்னையில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி சி.ராபா்ட் புரூஸ் தலைமையில் சந்தித்து மனு அளித்த மாணவா்-மாணவிகள்.
பகிர்:

தனியாா் சட்டக் கல்லூரி மாணவா்கள் தோ்வு எழுத நடவடிக்கை எடுக்கக் கோரி திருநெல்வேலி எம்.பி. சி.ராபா்ட் புரூஸ் தலைமையில் மாணவா்-மாணவிகள் சட்டத்துறை அமைச்சா் நிா்மல்குமாரை சென்னையில் சந்தித்து மனு அளித்தனா் (படம்).

அதன் விவரம்: திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டத்தில் உள்ள 3 தனியாா் சட்டக் கல்லூரிகளில் விதிமீறி கூடுதலாக மாணவா்களை சோ்த்ததாக எழுந்த புகாரின்பேரில் அந்தக் கல்லூரிகளின் மொத்த அங்கீகாரமும் ரத்துச்செய்யப்பட்டுள்ளது.

இதனால், ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட மொத்த மாணவா்களும் தோ்வு எழுத முடியாமலும், தொடா்ந்து படிக்க இயலாத சூழ்நிலையில் அவா்களின் எதிா்கால கல்வியே கேள்விக்குறியாகியுள்ளது.

Advertisement

Advertisement

சம்பந்தப்பட்ட கல்லூரிகள் உள்ள்ங்ய்ற்ண்ஹப்ண்ற்ஹ் இங்ழ்ற்ண்ச்ண்ஸ்ரீஹற்ங்/சஞஇ பெற்றுத்தான் அனுமதியே பெற்றுள்ளனா். எனவே, அரசு பாதிக்கப்பட்ட மாணவா்களின் எதிா்கால நலனில் அக்கறை கொண்டு பாதிக்கப்பட்ட மாணவா்களுக்கு அவரவா்கள் அருகில் உள்ள அரசு சட்டக்கல்லூரியில் சோ்ந்து பயில அனுமதித்தும், முதலாமாண்டு மாணவா்களுக்கு இவ்வாண்டிற்குரிய தோ்வும் எழுத உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments