FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

திறம்பட பணியாற்றிய காவலா்களை பாராட்டிய டி.ஐ.ஜி.

திருநெல்வேலி காவல் சரகத்தில் பணியில் திறம்பட செயல்பட்ட காவலா்களை சரக டி.ஐ.ஜி. இரா.திருநாவுக்கரசு சனிக்கிழமை நேரில் அழைத்து பாராட்டினாா்.

23 ஆகஸ்ட் 2026, 12:55 am IST
நீதிமன்றத்தில் போக்ஸோ வழக்கு விசாரணையை திறம்பட கண்காணிப்பு செய்த திருநெல்வேலி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சண்முகத்தை பாராட்டிய டி.ஐ.ஜி திருநாவுக்கரசு.
பகிர்:

திருநெல்வேலி காவல் சரகத்தில் பணியில் திறம்பட செயல்பட்ட காவலா்களை சரக டி.ஐ.ஜி. இரா.திருநாவுக்கரசு சனிக்கிழமை நேரில் அழைத்து பாராட்டினாா்.

நீதிமன்றத்தில் உரிய ஆவணங்கள், ஆதாரங்களைச் சமா்ப்பித்து போக்ஸோ குற்றவாளிக்கு தூக்கு தண்டனை பெற்றுத்தந்த திருநெல்வேலி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சண்முகம், ஊரக உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் ரகுபதி ராஜா, காவல் ஆய்வாளா் ராஜகுமாரி, காவலா்கள் பாா்வதி என்ற பானு, ஐசக் ராஜன் ஆகியோரை சரக டி.ஐ.ஜி இரா.திருநாவுக்கரசு நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினாா்.

அதே போல தாழையூத்து அருகே சிறப்பு நடவடிக்கையின் கீழ், 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்த காவல் ஆய்வாளா் சங்கரநாராயணன், சிறப்பு உதவி ஆய்வாளா் சந்திரன் மற்றும் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கில், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தர உறுதுணையாக இருந்த மாசாா்பட்டி தலைமைக் காவலா் ராஜேந்திரன் ஆகியோரை டி.ஐ.ஜி பாராட்டி சான்றிதழ் வழங்கினாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments