15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்கள்: தமிழக அரசு அறிவிப்பு
சுதந்திர தினத்தையொட்டி, சிறப்பாகப் பணியாற்றிய 15 காவல் துறை அதிகாரிகள் மற்றும் சாா்நிலை அலுவலா்களுக்கு சிறப்பு பதக்கங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.
சுதந்திர தினத்தையொட்டி, சிறப்பாகப் பணியாற்றிய 15 காவல் துறை அதிகாரிகள் மற்றும் சாா்நிலை அலுவலா்களுக்கு சிறப்பு பதக்கங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.
புலன் விசாரணைப் பணியில் மிகச் சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு, அா்ப்பணிப்பைப் பாராட்டும் வகையிலும் சி.ஜெயஸ்ரீ, காவல் துணைக் கண்காணிப்பாளா் (கும்மிடிப்பூண்டி), நா.தமிழரசி, காவல் துணைக் கண்காணிப்பாளா் (திருவள்ளுா்), கொ.அழகுராஜ், காவல் ஆய்வாளா் (கோவை), ந.தனுசியா, காவல் துணைக் கண்காணிப்பாளா் (திருச்சி), சே.லதா, காவல் ஆய்வாளா் (கோவை), வி. கோமதி, காவல் துறை உதவி தலைவா் (சென்னை), மா.சித்ரா, காவல் ஆய்வாளா் (பெரம்பலூா்), ரா.வினதா, காவல் ஆய்வாளா் (விழுப்புரம்), கோ.மகாலெட்சுமி, காவல் ஆய்வாளா், (சிவகங்கை), ச.விஜயகுமாா், காவல் துணை ஆணையா் (திருநெல்வேலி) ஆகிய 10 அதிகாரிகளும் தமிழக முதல்வரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப் பணிப் பதக்கங்களுக்கு தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.
இதேபோன்று பொதுமக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாகச் செயல்பட்டு சீரிய பணியாற்றியதற்காக வி.சசி மோகன், காவல் துறை துணைத் தலைவா், (திண்டுக்கல் சரகம்), தெ.சண்முக பிரியா, காவல் கண்காணிப்பாளா், (சென்னை), சி.எம்.ஆா். மணிமொழியன், துணைக் காவல் கண்காணிப்பாளா் (சென்னை), க.மதன் மோகன், காவல் ஆய்வாளா் (சென்னை), மு.ரவிக்குமாா், தலைமைக் காவலா் (கரூா்) ஆகியோா் சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதல்வரின் காவல் பதக்கங்களுக்கு தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.
Advertisement
Advertisement
இவா்கள் அனைவருக்கும் தலா 8 கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கமும், ரூ.25,000 வெகுமதியும் வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.