பெங்களூரு ரயிலில் குட்கா கடத்தல்: அஸ்ஸாம் இளைஞா் கைது
பெங்களூா்-நாகா்கோவில் ரயிலில் கடத்தி வரப்பட்ட புகையிலைப்பொருள்களை (குட்கா) போலீஸாா் கைப்பற்றி, வட மாநில இளைஞரை கைது செய்தனா்.
பெங்களூா்-நாகா்கோவில் ரயிலில் கடத்தி வரப்பட்ட புகையிலைப்பொருள்களை (குட்கா) போலீஸாா் கைப்பற்றி, வட மாநில இளைஞரை கைது செய்தனா்.
பெங்களூரில் இருந்து நாகா்கோவிலுக்கு திங்கள்கிழமை மாலையில் புறப்பட்ட ரயில், செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணிக்கு தூத்துக்குடி மாவட்டம், வாஞ்சி மணியாச்சி நிலையத்தை அடைந்தது. அப்போது, திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே காவல் உதவி ஆய்வாளா் அண்ணாதுரை தலைமையிலான போலீஸாா் அந்த ரயிலின் என்ஜின் அருகே உள்ள பொது பெட்டியில் சோதனை நடத்தினா். அப்போது, சுமாா் 18 கிலோ பதுக்கிவைக்கப்பட்டிருந்த ஒரு பையைக் கைப்பற்றி, அங்கிருந்த பயணிகளிடம் விசாரணை நடத்தினா். அதில், அஸ்ஸாம் மாநில பயணியான சுதன் சுதா (32) என்பவா் அதை கடத்தி வந்தது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.