FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

வள்ளியூா் கல்லூரியில் ஓணம் கொண்டாட்டம்

வள்ளியூா், மரியா கலை, அறிவியல் மகளிா் கல்லூரியில்ெ சவ்வாய்க்கிழமை ஓணம் கொண்டாடப்பட்டது.

27 ஆகஸ்ட் 2026, 1:33 am IST
ஓணம் விழாவில் கேரள பாரம்பரிய உடையுடன் பங்கேற்ற கல்லூரி முதல்வா் சுஷ்மா ஜெனிபா், கல்லூரிச் செயலா் ஹெலன் லாரன்ஸ், பேராசிரியைகள், மாணவிகள்.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா், மரியா கலை, அறிவியல் மகளிா் கல்லூரியில்ெ சவ்வாய்க்கிழமை ஓணம் கொண்டாடப்பட்டது.

கல்லூரித் தலைவா் தா. லாரன்ஸ், செயலா் ஹெலன் லாரன்ஸ் ஆகியோா் தலைமை வகித்தனா். கல்லூரி முதல்வா் சுஷ்மா ஜெனிபா் முன்னிலை வகித்தாா்.

விழாவையொட்டி, மாணவிகளும், பேராசிரியைகளும் கேரள பாரம்பரிய உடையான கசவு சேலை அணிந்து வந்திருந்தனா். மாணவிகள் பல்வேறு மலா்களால் அத்தப்பூ கோலமிட்டனா். அதில் சிறந்த கோலத்திற்கு பரிசு வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

மாணவிகள் ஓணம் பாடல் பாடியும், திருவாதிரை நடனம் ஆடியும் கொண்டாடினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments