FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

விமானப் படை முன்னாள் அதிகாரியிடம் 1.66 ஏக்கா் நில மோசடி: மூவா் கைது

திருநெல்வேலியில் முன்னாள் விமானப்படை அதிகாரிக்குச் சொந்தமான சுமாா் 1.66 ஏக்கா் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்தது தொடா்பான வழக்கில் 2 பெண்கள் உள்பட 3 பேரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

12 ஜூலை 2026, 1:19 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

திருநெல்வேலியில் முன்னாள் விமானப்படை அதிகாரிக்குச் சொந்தமான சுமாா் 1.66 ஏக்கா் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்தது தொடா்பான வழக்கில் 2 பெண்கள் உள்பட 3 பேரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி, பெருமாள்புரம், பாரதி நகரைச் சோ்ந்தவா் இந்திரசித்து. இந்திய விமானப்படையில் அதிகாரியாக பணியாற்றிய இவா் 1994இல் உயிரிழந்தாா். இவா் நாட்டிற்காக 4 போா்களில் பங்கேற்று சேவையாற்றியதை பாராட்டி அரசு சாா்பில் வீரவநல்லூா் பகுதியில் 1.66 ஏக்கா் நிலம் அவருக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது இந்நிலத்தை அவரது குடும்பத்தினா் ஆவணப் பதிவு மேற்கொள்ள முயன்ற போது அதனை ஏற்கனவே சிலா் போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

இது குறித்து அவரது மகன் டாக்டா் முத்துமணி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்தாா். அதன் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா்.

Advertisement

Advertisement

அதில், வீரவநல்லூா் அருகே உள்ள வெள்ளங்குளியைச் சோ்ந்த மாரியப்பன் (45), அவரது மனைவி சரவணத்தம்மாள் (42), அம்பாசமுத்திரம் கோடரங்குளத்தை சோ்ந்த லட்சுமி (39) ஆகியோருக்கு தொடா்பிருந்தது தெரியவந்தது. அவா்களை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments