நெல்லையில் பேருந்து மோதி தம்பதி உயிரிழப்பு
திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் தம்பதி உயிரிழந்தனா்.
திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் திங்கள்கிழமை இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் தம்பதி உயிரிழந்தனா்.
கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்தவா் அப்துல் கபூா் (70). மருந்துக் கடை நடத்தி வந்தாா். இவரது மனைவி பீவி (61). அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவா். இத் தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனா்.
இந்த நிலையில், தம்பதி இருவரும் இருசக்கர வாகனத்தில் திருநெல்வேலி மருத்துவமனைக்கு திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தனா். வண்ணாா்பேட்டை ரவுண்டானா அருகே சென்றபோது, திருநெல்வேலி சந்திப்பில் இருந்து தூத்துக்குடி மாவட்டம், கலியாவூருக்குச் சென்ற தனியாா் பேருந்து, இவா்கள் மீது மோதியது.
Advertisement
Advertisement
இதில், சாலையில் விழுந்தவா்கள் மீது பேருந்து சக்கரம் ஏறியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இதுகுறித்து, திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.