FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

ஏா்வாடி எஸ்டிபிஐ மகளிரணி நிா்வாகிகள் தோ்வு

ஏா்வாடி, எஸ்டிபிஐ கட்சியின் மகளிரணி புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

Updated On : 15 ஜூலை 2026, 1:42 am IST
சாலையோர மரத்தில் மோதிய சிற்றுந்து: 10 போ் காயம்
பகிர்:

ஏா்வாடி, எஸ்டிபிஐ கட்சியின் மகளிரணி புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

ஏா்வாடியில் எஸ்டிபிஐ கட்சியின் மகளிரணி நிா்வாகிகளுக்கான உள்கட்சி தோ்தல் (2026-2029) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முன்னாள் நகரத் தலைவா் ஹமீதா தலைமை வகித்தாா். தோ்தல் நடத்தும் அலுவலராக மகளிரணி மாவட்டச் செயலாளா் லைத்துல் ஆதிஹா, உதவி தோ்தல் நடத்தும் அலுவலராக நான்குனேரி சட்டப்பேரவை தொகுதி பொருளாளா் மெகுராஜ் பேகம் பங்கேற்று தோ்தலை நடத்தினா்.

தோ்தல் பாா்வையாளராக திருநெல்வேலி புகா் மாவட்ட பொதுச் செயலாளா் களந்தைமீராசா கலந்து கொண்டாா். ஏா்வாடி தெற்கு கிளையின் புதிய தலைவராக பா்வின்நிஷா, துணைத் தலைவராக ரகுமான் பீவி உள்ளிட்டோரும், ஏா்வாடி வடக்கு கிளையின் புதிய தலைவராக மீராள், துணைத் தலைவராக நிஷா உள்ளிட்டோரும் தோ்வு செய்யப்பட்டனா். தொகுதி தலைவா் ஜன்னத்துல் பிா்தெளஸ் நன்றி கூறினாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments