துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சி! இபிஎஸ் பேச்சு
அதிமுக மகளிரணி கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாகத் தகவல்...
அதிமுகவில் இருந்து துரோகிகள் வெளியேறி வருவதால் தொண்டர்கள் மகிழ்ச்சியுடனும் எழுச்சியுடனும் இருக்கிறார்கள் என மகளிரணி கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மகளிரணி கூட்டம் இன்று (புதன்கிழமை) காலை நடைபெற்றது.
கட்சியில் மகளிர் அணியின் செயல்பாடுகள் குறித்தும் கட்சியின் வளர்ச்சிப் பணிகளில் மகளிரின் பங்கு குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
அப்போது நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "அதிமுகவில் இருந்து துரோகிகள் வெளியேறி வருவதால் தொண்டர்கள் மகிழ்ச்சியுடனும் எழுச்சியுடனும் இருக்கிறார்கள். அதிமுக ஜனநாயகத்துடன் இயங்கக்கூடிய இயக்கம், அதிமுக என்பது ஒரு குடும்பம், பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு இருக்கிறார்கள். வருகிற தேர்தல்களில் மகளிர் அணி களப்பணியாற்ற வேண்டும். புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்" என்று பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை. இவர்கள் அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும் அதிமுகவில் இருந்த சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், எம்.எஸ்.எம். ஆனந்தன் ஆகியோர் கட்சியில் இருந்து விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Cadres happy as traitors leave: EPS speaks in ADMK meeting
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.