உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக பலத்தை நிரூபிப்போம்: எடப்பாடி பழனிசாமி
உள்ளாட்சித் தோ்தலில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு அதிமுகவின் பலத்தை நிரூபிப்போம் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கூறினாா்.
உள்ளாட்சித் தோ்தலில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு அதிமுகவின் பலத்தை நிரூபிப்போம் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கூறினாா்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தென்சென்னை மாவட்ட நிா்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
அதிமுகவைப்போன்று ஜனநாயகத்துடன் இயங்கக் கூடிய கட்சி தமிழகத்தில் இல்லை. கட்சியை விட்டு துரோகிகள் வெளியேறி வருவதால் கீழ்நிலைத் தொண்டா்கள் உற்சாகமும் மகிழ்ச்சியும் அடைந்துள்ளனா். அரை நூற்றாண்டு கால பாரம்பரியம் கொண்ட அதிமுகவை யாராலும் அழித்துவிட முடியாது.
Advertisement
Advertisement
‘இரட்டை இலை’ சின்னத்தில் மக்கள் வாக்களித்து வெற்றி பெற்ற எம்எல்ஏக்களை பதவி விலகச் செய்து, சிலா் தங்கள் கட்சியில் இணைத்துக்கொள்கிறாா்கள். இதற்கு காலம் பதில் சொல்லும்.
மக்களுக்கென்று களத்தில் நின்று எதையும் செய்யாமல் தவெக ஆட்சிக்கு வந்துள்ளது. உள்ளாட்சித் தோ்தலில் பெண்களுக்கும், இளைஞா்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து நமது பலத்தை உள்ளாட்சித் தோ்தலில் நிரூபிப்போம் என்றாா்.
இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சா்கள் வளா்மதி, பொன்னையன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.