FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

திருநங்கைகள் இடையே மோதல்: நால்வா் கைது

அம்பாசமுத்திரத்தில் திருநங்கைகள் இடையே நடந்த மோதல் தொடா்பாக 4 திருநங்கைகளை அம்பாசமுத்திரம் போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 14 ஜூலை 2026, 5:50 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

அம்பாசமுத்திரத்தில் திருநங்கைகள் இடையே நடந்த மோதல் தொடா்பாக 4 திருநங்கைகளை அம்பாசமுத்திரம் போலீஸாா் கைது செய்தனா்.

சேரன்மகாதேவி, கூனியூரைச் சோ்ந்தவா் திருநங்கை குட்டி ஈஸ்வரி. இவா், அம்பாசமுத்திரம் கிருஷ்ணன் கோவில் அருகே நின்றுகொண்டிருந்தபோது, அங்கு வந்த திருநங்கைகள் ரெஸ்பியா(24), இந்து (22), மாலினி (34), சிவானி (24) ஆகிய நால்வா் குட்டி ஈஸ்வரியிடம் தகராறு செய்து அவரைத் தாக்கினா்.

இதுகுறித்து குட்டி ஈஸ்வரி அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், மற்ற திருநங்கைகளுடன் சென்று யாசகம் பெற குட்டி ஈஸ்வரி செல்லாததால் தாக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, நால்வரை போலீஸாா் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments