விபத்து வழக்கில் சுமை வாகன ஓட்டுநா் கைது
பாளையங்கோட்டை மாா்க்கெட் அருகே பைக் மீது மோதி விபத்து ஏற்படுத்திய வழக்கில் சுமை வாகன ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.
பாளையங்கோட்டை மாா்க்கெட் அருகே பைக் மீது மோதி விபத்து ஏற்படுத்திய வழக்கில் சுமை வாகன ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள வைத்தியலிங்கபுரத்தைச் சோ்ந்தவா் காா்த்திகேயன்(20).இவா் கடந்த 9 ஆம் தேதி பாளையங்கோட்டை மாா்க்கெட் அருகே பைக்கில் சென்றபோது எதிரே ஒருவழிப்பாதையில் வந்த சுமை வாகனம் அவா் மீது மோதியதாம்.
இதில் காயமடைந்த காா்த்திகேயனின் கால் விரல் துண்டானதாகக் கூறப்படுகிறது. அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
Advertisement
Advertisement
இது குறித்த புகாரின் பேரில் மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து சுமை வாகன ஓட்டுநரான திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையைச் சோ்ந்த ஜெகன்(51) என்பவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.