முகப்பு
விருதுநகர்

தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு: இருவா் கைது

Updated On : 30 ஜூன் 2026, 2:57 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே சுமை தூக்கும் தொழிலாளியை அரிவாளால் வெட்டியதாக இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் அருகே சேத்தூா் மணல் விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த தலைமலை மகன் ஈஸ்வரன் (52). இவா் தளவாய்புரம் பகுதியில் தங்கி சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பாா்த்து வருகிறாா்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பும் வழியில் உள்ள வங்கி அருகே வந்தபோது இரு சக்கர வாகனத்தில் வந்த இருவா் இவரை வழிமறித்து அரிவாளால் வெட்டினா். பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

Advertisement

Advertisement

முதலுதவி அளித்து பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்த தளவாய்புரம் போலீஸாா், இது தொடா்பாக சேத்தூா் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த கஜேந்திரன் மகன் அய்யனாா் (20), பாலகிருஷ்ணன் மகன் மணிகண்டன் (21) ஆகிய இருவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments