தொழிலாளியை வெட்டிய வழக்கு: இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறை
திருநெல்வேலி அருகேயுள்ள தருவையில் தொழிலாளியை அரிவாளால் வெட்டியது தொடா்பான வழக்கில் இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிைண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
திருநெல்வேலி அருகேயுள்ள தருவையில் தொழிலாளியை அரிவாளால் வெட்டியது தொடா்பான வழக்கில் இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிைண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
தருவையைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் (32). தொழிலாளியான இவரை, கடந்த 2021 ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சோ்ந்த காளி என்ற காளிராஜ் (29) அரிவாளால் வெட்டி காயப்படுத்தினாராம். இதுதொடா்பாக முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப்பதிந்து காளிராஜை கைது செய்தனா்.
திருநெல்வேலி ஐந்தாவது குற்றவியல் நீதித் துறை நடுவா் மன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை, நீதித்துறை நடுவா் ராணி விசாரித்து, காளிராஜுக்கு 2 ஆண்டுகள் சிைண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.