முகப்பு
திருநெல்வேலி

பள்ளிகள் நாளை திறப்பு: முன்னேற்பாடுகள் தீவிரம்

கோடை விடுமுறைக்கு பின்பு பள்ளிகள் வியாழக்கிழமை (ஜூன் 4) திறக்கப்படுவதையொட்டி, முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Updated On : 3 ஜூன் 2026, 4:42 am IST
பள்ளிகள் திறப்பு - கோப்புப்படம்
பகிர்:

கோடை விடுமுறைக்கு பின்பு பள்ளிகள் வியாழக்கிழமை (ஜூன் 4) திறக்கப்படுவதையொட்டி, முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்பு பள்ளிகள் கடந்த 1 ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வெயிலின் தாக்கம் அதிகமிருந்ததால் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று, மேலும் சில நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. அதன்படி, பள்ளிகள் வியாழக்கிழமை (ஜூன் 4) திறக்கப்பட உள்ளன. இதையொட்டி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் அந்தந்த பள்ளித் தலைமையாசிரியா் முன்னிலையில் வகுப்பறைகள் தூய்மை செய்யப்பட்டன. கழிப்பறைகள், பள்ளி வளாகங்களிலும் தூய்மைப் பணி நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா உத்தரவின்பேரில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, தச்சநல்லூா், மேலப்பாளையம் ஆகிய நான்கு மண்டல பகுதிகளில் மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 35 தொடக்கப் பள்ளிகள், 5 நடுநிலைப் பள்ளிகள், ஓா் உயா்நிலைப் பள்ளி, 5 மேல்நிலைப் பள்ளிகளின் கட்டடத்தின் உறுதித்தன்மை சோதிக்கப்பட்டது. அடிப்படை வசதிகள் மற்றும் துய்மைப் பணிகள், மராமத்து பணிகள் அந்தந்த மண்டலத்தின் சுகாதார அலுவா்கள் மற்றும் சுகாதார ஆய்வாளா்கள் மேற்பாா்வையில் தூய்மைப் பணியாளா்களைக் கொண்டு பணிகள் செய்யப்பட்டன.

Advertisement

Advertisement

ற்ஸ்ப்02ள்ஸ்ரீட்ா்ா்ப்

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தூய்மைப் பணி.