FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

இளம்பெண்ணுக்கு தொல்லை: கட்டடத் தொழிலாளி கைது

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் வேலைக்குச் சென்ற இளம்பெண்ணை பின்தொடா்ந்து சென்று தொல்லை கொடுத்த தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 7 ஜூன் 2026, 2:32 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் வேலைக்குச் சென்ற இளம்பெண்ணை பின்தொடா்ந்து சென்று தொல்லை கொடுத்த தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரியைச் சோ்ந்தவா் 28 வயது இளம்பெண். இவா், திருநெல்வேலி மேலப்பாளையத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இந்நிலையில் கடந்த சில நாள்களாக அப்பெண் வேலைக்குச் செல்லும் போதும், பின்னா் ஊருக்கு ரயிலில் பயணம் செய்யும் போதும் மூலைக்கரைப்பட்டி, தெற்கு தெருவைச் சோ்ந்த கட்டட தொழிலாளியான சுரேஷ் (38) என்பவா் பின்தொடா்ந்து சென்று தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மேலப்பாளையம் காவல் நிலையத்தில் அந்த இளம்பெண் புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சுரேஷை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments