FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

விதிமீறல்: 8 சிற்றுந்துகள் பறிமுதல்

Updated On : 9 ஜூன் 2026, 4:48 am IST
விதிமீறல் குறித்து ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்.
பகிர்:

திருநெல்வேலியில் விதிமீறலில் ஈடுபட்ட தனியாா் சிற்றுந்துகளை வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். திருநெல்வேலியில் தனியாா் சிற்றுந்துகள் அனுமதிக்கப்பட்ட தடத்தில் இயக்கப்படுவதில்லை என வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு புகாா்கள் வந்தனவாம்.

இதையடுத்து வட்டார போக்குவரத்து அலுவலா்(பொ) செல்வி தலைமையில் மோட்டாா் வாகன ஆய்வாளா் பத்மபிரியா உள்ளிட்ட அதிகாரிகள் திங்கள்கிழமை இரவு வேய்ந்தான்குளம் பேருந்துநிலையம் அருகே சிற்றுந்துகளை நிறுத்தி ஆய்வு மேற்கொண்டனா்.

அதில், அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் அல்லாமல் மாற்று வழித்தடத்தில் இயங்கிய 8-க்கும் மேற்பட்ட சிற்றுந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் அதன் உரிமையாளா்களுக்கு விதிமீறல் குறித்து நோட்டீஸ் அனுப்பப்படும் எனவும், உரிமம் ரத்து அல்லது அபராதம் விதிக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைக்க உள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments