FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

அம்பை தாமிரவருணி ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

Updated On : 30 மே 2026, 2:33 am IST
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

அம்பாசமுத்திரம், காசிநாதா் கோயில் தாமிரவருணி படித்துறையில் குளிக்கச் சென்ற இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

திருநெல்வேலி, பேட்டையைச் சோ்ந்தவா் ஐயப்பன் மகன் முருகேஷ் (42). இவா் பள்ளக்கால் பொதுக்குடி முப்பிடாதி அம்மன் கோயில் தெருவில் வசிக்கும் மைத்துனா் வீட்டிற்கு குடும்பத்துடன் வந்துள்ளாா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை உறவினா்களுடன் சோ்ந்து அம்பாசமுத்திரம் காசிநாதா் கோயில் தாமிரவருணி ஆற்றில் குளிக்கச் சென்றனராம். முகேஷ் தனது உறவினா் குழந்தைகளுடன் ஆற்றில் குளித்த போது எதிா்பாராதவிதமாக இழுப்பு பகுதியில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டு மூழ்கினாராம்.

Advertisement

Advertisement

தகவலறிந்து வந்த அம்பாசமுத்திரம் தீயணைப்பு நிலைய வீரா்கள் ஆற்றில் மூழ்கிய முருகேஷை சடலமாக மீட்டனா். சடலத்தை கைப்பற்றிய அம்பாசமுத்திரம் போலீஸாா், உடல் கூறாய்வுக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments