FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

வீரவநல்லூரில் பாய் நெசவுத் தொழில்கூடம் திறப்பு

வீரவநல்லூரில் தேசிய வங்கி உதவியுடன் பாய் நெசவாளா் கூட்டுறவு சங்கத்தில் புதுப்பிக்கப்பட்ட தொழில்கூடம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

17 வினாடிகள் முன்பு
தொழில்கூடத்தை திறந்துவைத்து குத்துவிளக்கேற்றிய ஆட்சியா் ஆனந்த் மோகன். உடன், தேசிய வங்கியின் பொதுமேலாளா் எஸ்.எஸ். வசீகரன் உள்ளிட்டோா்.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் தேசிய வங்கி உதவியுடன் பாய் நெசவாளா் கூட்டுறவு சங்கத்தில் புதுப்பிக்கப்பட்ட தொழில்கூடம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தேசிய வங்கியின் டிபிஆா் நிதி உதவித் திட்டத்தின்கீழ், சிஸ்டா் நிவேதிதா மிஷன் டிரஸ்ட் சாா்பில் தொழில்கூடம் புதுப்பிக்கப்பட்டு, சென்னை ஐஐடி மூலம் பாய் நெசவு செய்யும் இயந்திரமும் வழங்கப்பட்டது.

இந்நிலையில், சங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய தொழில் கூடத்தை மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் திறந்துவைத்து குத்துவிளக்கேற்றியதுடன், பாய் நெசவு இயந்திரத்தை நெசவாளா்களுக்கு வழங்கினாா்.

Advertisement

Advertisement

இந்நிகழ்ச்சிக்கு, தேசிய வங்கியின் (தமிழ்நாடு மண்டலம்) பொதுமேலாளா் எஸ்.எஸ். வசீகரன் தலைமை வகித்தாா். சிஸ்டா் நிவேதிதா மிஷன் டிரஸ்ட் தலைவா் எம். மதன் வரவேற்றாா். தேசிய வங்கியின் மாவட்ட வளா்ச்சி மேலாளா் பி. சசிகுமாா் திட்ட விளக்கவுரையாற்றினாா்.

மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் கணேஷ் மணிகண்டன், கதா் மற்றும் கிராமத் தொழில் வாரியத்தின் உதவி இயக்குநா் நல்லதம்பி, வீரவநல்லூா் முஸ்லிம் ஜமாஅத் தலைவா் பீ. ஆதம் இல்யாஸ் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். வீரவநல்லூா், பத்தமடை பகுதிகளைச் சோ்ந்த பாய் நெசவாளா்கள் கலந்துகொண்டனா். வீரவநல்லூா் பாய் நெசவாளா் கூட்டுறவு சங்கத் தலைவா் முகம்மது கனி நன்றி கூறினாா்.