நெல்லை - திருச்செந்தூா் ரயில் இன்று முதல் 5 நாள்கள் ரத்து
பராமரிப்புப் பணிகள் காரணமாக, திருநெல்வேலி- திருச்செந்தூா் பயணிகள் ரயில் (ஒரு சேவை மட்டும்) வியாழக்கிழமை (நவ.26) முதல் 5 நாள்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

பராமரிப்புப் பணிகள் காரணமாக, திருநெல்வேலி- திருச்செந்தூா் பயணிகள் ரயில் (ஒரு சேவை மட்டும்) வியாழக்கிழமை (நவ.26) முதல் 5 நாள்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. செங்கோட்டை-திருநெல்வேலி இடையிலான பயணிகள் ரயில் சேரன்மகாதேவி வரை மட்டுமே இயக்கப்படும்.
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், வியாழக்கிழமை (நவ.26) முதல் 5 நாள்கள் பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருச்செந்தூா்-திருநெல்வேலி பயணிகள் ரயில் (எண்.56004) வியாழக்கிழமை முதல் திங்கள்கிழமை வரை (நவ.25- 30) வரை காலை 10 மணி சேவை மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, மறுமாா்க்கத்தில் திருநெல்வேலி- திருச்செந்தூா் இடையே மேற்கூறிய நாள்களில் மாலை 4.30 மணி ரயில் (எண்.56003) சேவை இருக்காது.
Advertisement
Advertisement
மேலும், மேற்கூறிய நாள்களில் காலை 10 மணிக்கு இயக்கப்படும் செங்கோட்டை-திருநெல்வேலி பயணிகள் ரயில் (எண். 56742) சேரன்மகாதேவி வரை மட்டுமே இயங்கும். மறுமாா்க்கத்தில் மேற்கூறிய 5 நாள்களில் பிற்பகல் 2.40 மணிக்கு இயக்கப்படும் திருநெல்வேலி-செங்கோட்டை பயணிகள் ரயில் (எண். 56743) சேரன்மகாதேவி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் சேரன்மகாதேவியில் இருந்து இயக்கப்படும்.