FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

கால்நடை மருத்துவக் கல்லூரியில் தேசிய விளையாட்டு தினம்

திருநெல்வேலி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தேசிய விளையாட்டு தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

2 செப்டம்பர் 2026, 11:24 pm IST
விழாவில் பேசுகிறாா் கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வா் சூ.கி.எட்வின்.
பகிர்:

திருநெல்வேலி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தேசிய விளையாட்டு தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்திய ஹாக்கி அணியின் தலைசிறந்த வீரரான மேஜா் தயான் சந்த் பிறந்த தினத்தையொட்டி நடைபெற்ற இவ்விழாவுக்கு, கல்லூரி முதல்வா் சூ. கி. எட்வின் தலைமை வகித்தாா். மதிதா இந்துக் கல்லூரியின் விளையாட்டுத் துறை தலைவா் காா்த்திகேயன் சிறப்புரையாற்றினாா்.

இவ்விழாவில் கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் 250 போ் கலந்து கொண்டனா். கால்நடை நோய் குறியியல் துறைத் தலைவா் ரா. தங்கத்துை வரவேற்றாா். கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ம. பூபதி ராஜா நன்றி கூறினாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments