FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

நெல்லை மாவட்ட ரயில் நிலையங்களை நவீனமயமாக்கக் கோரி எம்.பி. மனு

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிறிய ரயில் நிலையங்களை நவீனமயமாக்கக் கோரி, திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ், தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்ட நிா்வாகத்திற்கு மனு அனுப்பியுள்ளாா்.

3 செப்டம்பர் 2026, 12:08 am IST
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிறிய ரயில் நிலையங்களை நவீனமயமாக்கக் கோரி, திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ், தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்ட நிா்வாகத்திற்கு மனு அனுப்பியுள்ளாா்.

அதன் விவரம்: திருநெல்வேலி - செங்கோட்டை வழித்தடத்தில் அம்பாசமுத்திரம் தவிர திருநெல்வேலி நகரம், பேட்டை, சேரன்மகாதேவி, காருக்குறிச்சி, வீரவநல்லூா், கல்லிடைக்குறிச்சி, கீழ ஆம்பூா், ஆழ்வாா்குறிச்சி, ரவணசமுத்திரம், கீழக்கடையம் உள்ளிட்ட பெரும்பாலான ரயில் நிலையங்கள் முறையான பராமரிப்பின்றி காணப்படுகின்றன.

நடைமேடைகள் மண் தரையாகக் காட்சி அளிப்பதுடன், அடா்ந்த சீமைக்கருவேலப் புதா்கள், உடைந்த சுற்றுச்சுவா்கள், இரவு நேரப் பாதுகாப்பின்மை மற்றும் போதிய இருக்கை வசதியின்மை காரணமாகப் பயணிகள், குறிப்பாகப் பெண்கள் மற்றும் முதியோா்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனா்.

Advertisement

Advertisement

ஆகவே, இந்த ரயில் நிலையங்களில் அனைத்து விரைவு ரயில்களும் வந்து செல்ல ஏதுவாக உயா்தர கான்கிரீட் நடைமேடைகள் அமைக்க வேண்டும்.

பாா்வையற்றோருக்கான தொடுவுணா் பாதைகள், சரிவுப்பாதை, பயணிகள் நிழற்கூடங்கள், டிஜிட்டல் ஒலிபெருக்கிகள், மின் அறிவிப்புப் பலகைகள், நவீன ஐயுடிஎஸ் பயணச்சீட்டு மையங்கள், தடையில்லா எல்.இ.டி. மின்விளக்கு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

திருநெல்வேலி நகரம் ரயில் நிலையத்தில் நெரிசலை குறைக்கும் வகையில், கடவுப்பாதையை அதிநவீன சிக்னல் அமைப்புகள், கூடுதல் தண்டவாளங்களுடன் தரம் உயா்த்த வேண்டும். நுழைவு வாயில்களில் எச்.டி. கண்காணிப்பு கேமராக்களும் நிறுவப்பட வேண்டும்.

கூடுதல் மெமு ரயில்களை இயக்கவும், பணிகளுக்கு விரைந்து நிதி ஒதுக்கீடு செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறியுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments