அய்யா வைகுண்டர்பட்டினத்தில் பட்டாபிஷேகம்
திருச்செந்தூர் - பரமன்குறிச்சி பிரதான சாலையில் உள்ள அய்யா வைகுண்டர்பட்டினம் சந்தனவனத்தில் 184ஆவது அவதார தின விழாவை முன்னிட்டு திருஏடு வாசிப்பு திருவிழா, பட்டாபிஷேகம் நடைபெற்றது.
திருச்செந்தூர் - பரமன்குறிச்சி பிரதான சாலையில் உள்ள அய்யா வைகுண்டர்பட்டினம் சந்தனவனத்தில் 184ஆவது அவதார தின விழாவை முன்னிட்டு திருஏடு வாசிப்பு திருவிழா, பட்டாபிஷேகம் நடைபெற்றது.
அய்யா வைகுண்டருக்கு பணிவிடையும், பகல் உச்சிப்படிப்பும் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு திருஏடு வாசிப்பும், பட்டாபிஷேக விழாவும், ஊஞ்சல் சேவையும் நடந்தது. ஊஞ்சல் சேவையை அய்யா வழி சமயத் தலைவர் மகாகுரு பாலபிரஜாபதி அடிகளார் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில், பேராசிரியர் ஆர். தர்மரஜினி, காயாமொழி இன்பசேகரன், பாரதி, குருசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.