நல்லான்விளை பதியில் அய்யா அவதார தினம்
நாசரேத் அருகே உள்ள இடையன்விளை நல்லான்விளை அய்யா வைகுண்டசாமி பதியில் அய்யாவின் 184ஆவது அவதார தின விழா நடைபெற்றது.
நாசரேத் அருகே உள்ள இடையன்விளை நல்லான்விளை அய்யா வைகுண்டசாமி பதியில் அய்யாவின் 184ஆவது அவதார தின விழா நடைபெற்றது.
பதியின் அருளாளர் ஐயன்சாமி தலைமை வகித்து விழாவைத் தொடங்கிவைத்தார். நண்பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பும், பிற்பகல் 1 மணிக்கு அன்னதர்மமும் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
ஞாயிறு தோறும் பிற்பகல் 1 மணிக்கு அன்னதர்மமும், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு அய்யாவின் அருள்வாக்கு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.