ஆறுமுகனேரியில் வீட்டில் நகை திருட்டு
ஆறுமுகனேரியில் வீட்டின் கதவை உடைத்து நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஆறுமுகனேரியில் வீட்டின் கதவை உடைத்து நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஆறுமுகனேரி வடக்குதெரு எல்.எப். சாலையில் வசித்து வருபவர் பூராஜ். இவர் சென்னையில் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி புனிதா மற்றும் அவர்களது குழந்தைகள் ஆறுமுகனேரியில் வசித்து வருகின்றனர். புனிதா அவரது குழந்தைகளுடன் கடந்த 27ஆம் தேதி சோனகன்விளையில் தனது தாய் வீட்டு கோயில் கொடைக்கு சென்று விட்டனர். பின்னர் கடந்த 31ஆம் தேதி இரவு வீட்டிற்கு வந்த போது வீட்டின் பின்புற கதவை உடைக்கப்பட்டிருந்தாம்.
இதையடுத்து உள்ளே சென்று பார்த்து போது, அங்கு பீரோவில் இருந்த நெக்லஸ், 2 மோதிரங்கள், ஒரு ஜோடி கம்மல் உள்பட ஆறே கால் பவுன் நகை திருடு போனது தெரிய வந்ததாம். இது தொடர்பாக புனிதா ஆறுமுகனேரி காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.