கோவில்பட்டி தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயில் கொடை விழா
கோவில்பட்டி வள்ளுவர் நகர் கிழக்குப் பகுதியில் உள்ள அருள்மிகு தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயில் கொடை விழா நடைபெற்றது.
கோவில்பட்டி வள்ளுவர் நகர் கிழக்குப் பகுதியில் உள்ள அருள்மிகு தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயில் கொடை விழா நடைபெற்றது.
இதையொட்டி, கடந்த 27ஆம் தேதி கால் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து, நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இந்நிலையில், வியாழக்கிழமை காலை 6 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, திருப்பள்ளி எழுச்சி பூஜை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பின்னர், அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. இதை அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தூத்துக்குடி மாவட்டச் செயலர் சுந்தரராஜ் தலைமையில், கட்சியின் தென்மண்டலப் பொறுப்பாளர் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா தொடக்கிவைத்தார். நிகழ்ச்சியில், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டச் செயலர் சீனிராஜ், ஒன்றியச் செயலர் ஈஸ்வரப்பாண்டியன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் நாகராஜன், கட்சி நிர்வாகி செல்வக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 3) காலை 10 மணிக்கு அம்மன் குடியழைப்பு, அக்னிச்சட்டி, ஊர் விளையாடி வருதல், இரவு 12 மணிக்கு சாமக்கொடை, பூக்குழி நிகழ்ச்சி, சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா, மாலை 5 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம் நடைபெறும்.
ஏற்பாடுகளை கோயில் நிர்வாகக் குழுத் தலைவர் அமிர்தராஜ்பாண்டியன், தர்மகர்த்தா சங்கரபாண்டியன், பொருளாளர் உத்தண்டுபாண்டியன், செயலர் செல்லத்துரை, விழாக் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.