FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இந்திய மாணவர் சங்க மாவட்ட மாநாடு

இந்திய மாணவர் சங்க தூத்துக்குடி மாவட்ட மாநாடு கோவில்பட்டியில் 2 நாள்கள் நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 9:57 pm IST
பகிர்:

இந்திய மாணவர் சங்க தூத்துக்குடி மாவட்ட மாநாடு கோவில்பட்டியில் 2 நாள்கள் நடைபெற்றது.
மாநாட்டு தொடக்க விழா நிகழ்ச்சிக்கு இந்திய மாணவர் சங்க மத்தியக் குழு உறுப்பினர் ஆனந்த் தலைமை வகித்து மாநாட்டை தொடங்கிவைத்துப் பேசினார். மாவட்டச் செயலர் செ. சுரேஷ்பாண்டி அறிக்கை வாசித்தார். மாவட்டத் துணைத் தலைவர் சுப்புலட்சுமி மாநாட்டுக் கொடியை ஏற்றி வைத்தார். மாவட்டத் தலைவர் அமர்நாத் வரவேற்றார். கெளசல்யா அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார்.  
 சனிக்கிழமை நடைபெற்ற 2ஆம் நாள் மாநாட்டில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் வெங்கடேஷ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலர் முத்து, அனைத்திந்திய மாதர் சங்க மாவட்டச் செயலர் பூமயில் ஆகியோர் பேசினர். இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவர் மாரியப்பன் மாநாட்டில் நிறைவுரையாற்றினார். நகரச் செயலர் சங்கரலிங்கம் நன்றி கூறினார். மாநாட்டில், மாவட்டத் தலைவராக ஜாய்சன், மாவட்டச் செயலராக சுரேஷ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:  தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர்நீத்த 13  பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும். எட்டயபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளியை அரசுப் பள்ளியாக அறிவிக்க வேண்டும். கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் பகுதிகளில் கல்லூரி மாணவிகளுக்கான விடுதியை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 
முன்னதாக, வெள்ளிக்கிழமை கிருஷ்ணன் கோயில் தெருவில் இந்திய மாணவர் சங்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments