கோயில் சொத்துகள், சிலைகளை பாதுகாக்கக் கோரி நூதனப் போராட்டம்
கோவில்பட்டியில் இந்து முன்னணி அமைப்பினர் கோயில் சொத்துக்கள் மற்றும் சிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட
கோவில்பட்டியில் இந்து முன்னணி அமைப்பினர் கோயில் சொத்துக்கள் மற்றும் சிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில் சொத்துக்கள், சிலைகளை பாதுகாக்க வேண்டும். நிலங்களை பாதுகாக்க வேண்டும், காணாமல் போன சிலைகளை மீட்க வேண்டும், சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரணை நடத்தும் ஐ.ஜி.பொன்மாணிக்கவேலுக்கு நெருக்கடி கொடுத்து வரும் அதிகாரிகளை கண்டித்தும் கோவில்பட்டியில் இந்து முன்னணி அமைப்பினர் அருள்மிகு செண்பகவல்லி அம்மன் அருள்மிகு பூவனநாதசுவாமி திருக்கோயில் வளாகத்தில் உள்ள உண்டியலில் மனு அளித்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் இந்து முன்னணி பொதுச் செயலர் சுதாகரன், நகரச் செயலர் வெங்கடேஷன், தலைவர் சீனிவாசன், கயத்தாறு ஒன்றியத் தலைவர் ராஜமாணிக்கம், குருவிகுளம் ஒன்றியச் செயலர் முருகன், கழுகுமலை நகரப் பொதுச் செயலர் பிரபாகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.