FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கோயில் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு  கடையை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டியில் இந்து சமய அறநிலையத் துறைக்குப் பாத்தியப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டுள்ள அசைவக் கடையை

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

கோவில்பட்டியில் இந்து சமய அறநிலையத் துறைக்குப் பாத்தியப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டுள்ள அசைவக் கடையை உடனடியாக அகற்றக் கோரி பாஜகவினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலுக்குப் பாத்தியப்பட்ட எட்டயபுரம் சாலையில் உள்ள வணிக வளாகத்தில் அண்மையில் அசைவக் கடை ஒன்று திறக்கப்பட்டது. 
இதையடுத்து, இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடத்தில் ஆகம விதிமுறை மற்றும் தமிழ்நாடு இந்து அறநிலையத் துறை சட்டத்தை மீறி, அசைவக் கடை வைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளதைக் கண்டித்தும், அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜக மாவட்டச் செயலர் சிவந்தி நாராயணன் தலைமையில், ஒன்றிய பொதுச்செயலர்கள் மாரிமுத்து, நகரப் பொதுச்செயலர்கள் முனியராஜ்,  தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் பாஜகவினர் செண்பகவல்லி அம்மன் கோயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
பின்னர் கோரிக்கை மனுவை கோயில் அலுவலரிடம் அளித்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் அனுமதியின்றி வைக்கப்பட்ட அசைவக் கடை உடனடியாக அகற்றப்பட்டுவிட்டதாக தெரிவித்ததையடுத்து பாஜகவினர் கலைந்து சென்றனர். 
இதில், ஒன்றியப் பொருளாளர் ராஜேந்திரன், ஒன்றியத் துணைத் தலைவர் மாரிமுத்து மற்றும் பாஜக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments