FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தடுப்பு வேலியில் மோதிய கார்: சிறப்பு உதவி ஆய்வாளர் உள்பட இருவர் பலத்த காயம்

கோவில்பட்டியில் திடீரென நிலைகுலைந்து தடுப்பு வேலியில் கார் மோதியதில் கார் ஓட்டுநர் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். 

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

கோவில்பட்டியில் திடீரென நிலைகுலைந்து தடுப்பு வேலியில் கார் மோதியதில் கார் ஓட்டுநர் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். 
கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக்கு மதுரையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டு,  ஒரு வாகனம் குழித்துறை நோக்கி சென்றது.  அந்த வாகனத்தின் முன்னும் பின்னும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புக்குச் சென்றனர். 
இந்நிலையில், மார்த்தாண்டம் கிறிஸ்துதாஸ் மகன் ஸ்டீபன் (44) ஓட்டி வந்த கார் திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டியையடுத்த நாலாட்டின்புத்தூர் அருகே சென்று கொண்டிருந்த போது,  திடீரென நிலைகுலைந்து  சாலையோரத்தில் உள்ள தடுப்புச் சுவர் மீது ஏறி, அங்கிருந்த கம்பிகள் மீது ஏறி அந்தரத்தில் நின்றது.  இந்நிலையில், கார் ஓட்டுநர் ஸ்டீபன் மற்றும் அதில் பயணம் செய்த கன்னியாகுமரி மாவட்டம், ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் அ.சங்கர்(53) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர்.  
மேலும், காரில் பயணம் செய்த இருவர் லேசான காயமடைந்தனர்.  தகவலறிந்தவுடன் டி.எஸ்.பி. ஜெபராஜ்,  கயத்தாறு காவல் ஆய்வாளர் ஆவுடையப்பன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று, காயமடைந்த இருவரையும் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதலுதவி சிகிச்சைக்குப் பின், தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments