FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் விடுதி தினவிழா

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் விடுதி தின விழா நடைபெற்றது.

Updated On : 31 டிசம்பர் 2018, 9:40 am IST
பகிர்:

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் விடுதி தின விழா நடைபெற்றது.
இவ்விழாவுக்கு, முதல்வர் கோ. சுகுமார் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு கூடைப்பந்து கழகத் துணைத் தலைவர் பாலன் பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.
வெள்ளை ராக்கர்ஸ், கருஞ் சிறுத்தைகள், ஊதா டிராகன்ஸ் மற்றும் சிவப்பு ரைனோஸ் ஆகிய 4 அணிகளாக மாணவர், மாணவிகள் போட்டிகளில் பங்கேற்றனர்.
விழாவில், விடுதி காப்பாளர் பா. ஜவஹர், மாணவர் விடுதி துணைக் காப்பாளர் வி. விஜயராகவன், மாணவியர் விடுதி துணைக் காப்பாளர் உமா மகேஷ்வரி, மாணவர் உணவகச் செயலர் ஜெயப்பிரகாஷ் சபரி, மாணவிகள் உணவகச் செயலர் சத்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments