FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

"புன்னக்காயலில் 1500 வீடுகளுக்கு பட்டா வழங்க நடவடிக்கை'

ஆத்தூர் அருகேயுள்ள புன்னக்காயலிலில் 1500 வீடுகளுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

Updated On : 31 டிசம்பர் 2018, 9:40 am IST
பகிர்:

ஆத்தூர் அருகேயுள்ள புன்னக்காயலிலில் 1500 வீடுகளுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
புன்னக்காயலிலில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 22 லட்சம் மதிப்பில் நீர்த்தேக்கத்தொட்டி கட்டப்பட்டுள்ளது. 
இதன் திறப்பு விழாவுக்கு பங்குத்தந்தை கிஷோக் தலைமை வகித்தார். ஊர்க் கமிட்டித் தலைவர் செல்ட்டன், துறைமுகக் கமிட்டித் தலைவர் இளங்கோ, நகர திமுக செயலர் சோபியா, அகில இந்திய கப்பல் மாலுமிகள் சங்கத் தலைவர் விமல்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. குடிநீர் தொட்டியினை திறந்து வைத்து பேசியது:  புன்னக்காயலில் நிலவும் குடிநீர் பிரச்னையை தீர்க்கும் வகையில் 5 லட்சம் லிலிட்டர் கொள்ளளவில் தொட்டி அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது. மேலும், கப்பல் மாலுமிகள் சங்கம் சார்பில் ரூ. 1 கோடி மதிப்பில் குடிநீர் அபிவிருத்தி திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருவது பாராட்டுக்குரியது. 
5 ஆண்டுகள் ஒரே இடத்தில் வசிப்போருக்கு பட்டா வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. மேலும், நிலப்பகுதியை நத்தம் புறம்போக்காக மாற்றம் செய்து அரசாணை வெளியிட ஆட்சியர் மூலம் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறு அறிவிக்கப்பட்டால் இங்குள்ள 1500 வீடுகளுக்கு பட்டா வழங்கப்படும் என்றார் அவர்.
விழாவில், ஆழ்வை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சுடலை, திருச்செந்தூர் ஒன்றிய தி.மு.க செயலர் செங்குழி ரமேஷ், தி.மு.க விவசாய அணி துணைஅமைப்பாளர் சதீஷ்குமார்,  ஊராட்சி மன்ற முன்னாள் துணைத்தலைவர் அக்பர், மாநில மாணவரணி துணைச்செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் ராமஜெயம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments