மாவட்ட ஹாக்கி: மாணவர் விளையாட்டு விடுதி அணி முதலிடம்
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டியில் மாணவர்
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டியில் மாணவர் விளையாட்டு விடுதி எக்ஸேல்லன்ஸ் அணி முதலிடம் பெற்றது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தூத்துக்குடி மாவட்டம் சார்பில் மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி கோவில்பட்டி செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் சனிக்கிழமை தொடங்கியது. எஸ்.எஸ்.துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரி, இலுப்பையூரணி ஹாக்கி அணி, பாண்டவர்மங்கலம் ஹாக்கி அணி, லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாதெமி அணி, நேதாஜி ஹாக்கி அணி உள்பட 13 அணிகள் பங்கேற்றன.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் மாணவர் விளையாட்டு விடுதி எக்ஸேல்லன்ஸ் அணியும், எஸ்.எஸ்.துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரி அணியும் மோதின. இதில் 4-1 என்ற கோல் கணக்கில் மாணவர் விளையாட்டு விடுதி அணி வெற்றி பெற்றது.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் வீரர் ராமசாமி கலந்துகொண்டு முதல் இரு இடங்களைப் பிடித்த அணியினருக்கு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு அலுவலர் தீர்தோஸ், அட்கா கமிட்டி உறுப்பினர்கள் அமுதகுமார், விஜயகுமார், ஹாக்கி பயிற்சியாளர் முத்துகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.