FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

"குடிநீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் இணைப்பு துண்டிக்கப்படும்'

நாசரேத் பேரூராட்சியில் குடிநீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் இணைப்பு துண்டிக்கப்படும் என்றார் செயல்அலுவலர் கே.ஆர்.பி.மணிமொழிசெல்வன் ரங்கசாமி.

Updated On : 7 ஜூன் 2018, 5:35 am IST
பகிர்:

நாசரேத் பேரூராட்சியில் குடிநீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் இணைப்பு துண்டிக்கப்படும் என்றார் செயல்அலுவலர் கே.ஆர்.பி.மணிமொழிசெல்வன் ரங்கசாமி.
இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொதுமக்கள், வீடுகள்தோறும் தள்ளுவண்டிகள் மூலம் குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபடும் துப்புரவுப் பணியாளர்களிடம்,  மக்கும் குப்பை, மக்காத குப்பை ஆகியவற்றை தரம் பிரித்து வழங்கி பொதுசுகாதாரத்தை பேணிக்காக்க நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.  டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் தண்ணீரை நன்கு காய்ச்சி குடிக்க வேண்டும். கோடையில் குடிநீர்த் தட்டுப்பாட்டை தவிர்க்கும் வகையில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
மேலும், குடிநீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் எந்தவித முன்அறிவிப்புமின்றி மோட்டார் பறிமுதல் செய்யப்படுவதோடு, குடிநீர் இணைப்பையும் துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments