FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

அம்பாசமுத்திரத்தில் தாகம் தணிக்கும் நிகழ்ச்சி

தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில் அம்பாசமுத்திரத்தில் தாகம் தணிக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.பூக்கடை சந்திப்பில் காவல் கண்காணிப்பு அறை அருகே நடைபெற்ற

Updated On : 25 மே 2018, 12:54 am IST
பகிர்:

தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில் அம்பாசமுத்திரத்தில் தாகம் தணிக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
பூக்கடை சந்திப்பில் காவல் கண்காணிப்பு அறை அருகே நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு வட்டாட்சியர் சொர்ணம், குளிர்பானம் மற்றும் தண்ணீர் வழங்கி, தொடங்கிவைத்தார். அம்பாசமுத்திரம் காவல் துணை கண்காணிப்பாளர் ஜாஹிர்உசேன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், காவல் உதவி ஆய்வாளர் வெங்கடேஷ், காவலர்கள், நகர்மன்றப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், வனத்துறை ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், பேருந்து, வாகனங்களின் ஓட்டுநர்கள் உள்பட 700-க்கும் மேற்பட்டோருக்கு குளிர்பானம், தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன.
இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும திருநெல்வேலி அலுவலக மேலாளர் பாலசுப்பிரமணியன், உதவி விற்பனை மேலாளர் ஸ்ரீகுரு, நெல்லை அக்வா நிறுவன உரிமையாளர் கிருபாகரன், விற்பனையாளர் ராஜேஷ், அம்பாசமுத்திரம் அக்ஷயா பல்பொருள் அங்காடி உரிமையாளர் மகேஷ்ராஜா, தினமணி முகவர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments