சாத்தான்குளம் நூலகத்தில் இளம் படைப்பாளர் விருதுக்கான போட்டி
மாவட்ட அளவிலான இளம் படைப்பாளர் விருதுக்காக, மாணவர், மாணவிகளுக்கான போட்டி சாத்தான்குளம் ராம கோபாலகிருஷ்ண பிள்ளை அரசு கிளை நூலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட அளவிலான இளம் படைப்பாளர் விருதுக்காக, மாணவர், மாணவிகளுக்கான போட்டி சாத்தான்குளம் ராம கோபாலகிருஷ்ண பிள்ளை அரசு கிளை நூலகத்தில் நடைபெற்றது.
வாசகர் வட்டத் தலைவர் நடராஜன் தலைமை வகித்து தொடங்கிவைத்தார். வட்டார மனிதநேய நல்லிணக்க பெருமன்றச் செயலர் மகா. பால்துரை, ஓய்வுபெற்ற ஆசிரியர் ஜோசப் துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நூலகர் சித்திரைலிங்கம் வரவேற்றார். வட்டார அளவில் 6முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர், மாணவிகளுக்கு கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, கவிதை போட்டி ஆகியவை நடைபெற்றன.
இப் போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் பரிசு பெற்றவர்கள் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். அதில் வெற்றி பெறுபவர்களுக்கு இளம் படைப்பாளர் விருது வழங்கப்படுகிறது. நிகழ்ச்சியில், அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட இணைச் செயலர் ஜெயபால், நூலகப் பணியாளர்கள் சுஜி, சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நூலகர் சுப்பிரமணியம் நன்றி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.