தூத்துக்குடியில் 2 இடங்களில் கூட்டுறவு சிறப்பு அங்காடி திறப்பு
தூத்துக்குடியில் இரண்டு இடங்களில் தரம் உயர்த்தப்பட்ட கூட்டுறவு சிறப்பு அங்காடிகள் புதன்கிழமை திறக்கப்பட்டன.
தூத்துக்குடியில் இரண்டு இடங்களில் தரம் உயர்த்தப்பட்ட கூட்டுறவு சிறப்பு அங்காடிகள் புதன்கிழமை திறக்கப்பட்டன.
தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட போல்பேட்டை, புதிய துறைமுகம் ஆகிய பகுதிகளில் உள்ள நியாய விலைக்கடைகள் சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. அந்த அங்காடிகள் திறப்பு விழா நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிகளில், தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ கலந்து கொண்டு, சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகளை திறந்துவைத்து, விற்பனையைத் தொடக்கிவைத்தார். அப்போது, பொது மக்கள் அதிகளவில் சிறப்பு அங்காடிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் அருளரசு, துணைப் பதிவாளர்கள் சிவகாமி, கோமதி நாயகம், ரவிச்சந்திரன், கூட்டுறவு பண்டகசாலை மேலாண்மை இயக்குநர் சுப்பிரமணியன், வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குநர் சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.