பெட்ரோல், டீசல் விலை உயர்வை ரத்து செய்யக் கோரி நூதன ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல், காப்பீட்டுக் கட்டணம் மற்றும் சுங்கவரிக் கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரிஅனைத்து ஆட்டோ, கார், வேன் ஓட்டுநர்கள் சார்பில், கோவில்பட்டியில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல், காப்பீட்டுக் கட்டணம் மற்றும் சுங்கவரிக் கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரிஅனைத்து ஆட்டோ, கார், வேன் ஓட்டுநர்கள் சார்பில், கோவில்பட்டியில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பயணியர் விடுதி முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அண்ணா தொழிற்சங்க வட்டச் செயலர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். சுமை ஆட்டோ சங்கத் தலைவர் குழந்தைபாண்டி, வேன் ஸ்டான்ட் தலைவர் மகாராஜன், செயலர் சுப்பாராமன், அம்பேத்கர் சுமை ஆட்டோ சங்கத் தலைவர் பாலமுருகதண்டபாணி, செயலர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தை ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்க மாவட்டப் பொதுச் செயலர் ராஜசேகரன் தொடங்கிவைத்தார்.
மாட்டுவண்டியின் மீது ஆட்டோ, ஸ்கூட்டர் ஆகியவற்றை ஏற்றி நூதன முறையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்க நிறுவனர் செல்லத்துரை ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து வைத்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.