FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடு: ஆட்சியர் ஆலோசனை

தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அண்மையில் ஆலோசனை மேற்கொண்டார்.

30 ஜனவரி 2024, 10:12 pm IST
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அண்மையில் ஆலோசனை மேற்கொண்டார்.
ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற  இக் கூட்டத்தில் ஆட்சியர்  பேசியது:
  மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ள திருமண மண்டபங்கள், பள்ளிக் கூடங்கள் அனைத்தும், அந்தந்த பகுதிகளிலுள்ள வருவாய்த் துறை அலுவலர்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பொதுமக்களுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் தடையின்றி கிடைக்க, அந்தந்தப் பகுதிகளில் உள்ள நுகர்பொருள் கிடங்குகளில் தேவையான அளவு உணவு இருப்பு இருப்பதை நுகர்பொருள் வழங்குதல் துறை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். 
குளங்கள் அனைத்தையும் பார்வையிட்டு பலவீனமாக உள்ள கரைகளை பொதுப்பணித் துறை அலுவலர்கள் சீரமைக்க வேண்டும். மதகுகளில் பழுது ஏதும் இருப்பின் அதை சீரமைத்து இயங்கும் வகையில் தயாராக வைத்திருக்க வேண்டும். வெள்ள நீர் வடிந்து செல்லும் ஓடைகள் மற்றும் வாய்க்கால்களில் தடையின்றி நீர் செல்ல தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும். 
 மாவட்ட தீயணைப்புத் துறையினர் மற்றும் மீன்வளத் துறையினர் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களை பாதுகாக்கும் படகு உள்ளிட்ட பொருள்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். போக்குவரத்து துறையினர் தடையின்றி போக்குவரத்து வசதியை பொதுமக்களுக்கு ஏற்படுத்தித்தர வேண்டும்.
வடகிழக்கு பருவமழையின் போது வெள்ளம் ஏற்பட்டால் பொதுமக்களுக்கு சிறிதளவும் பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, பொதுமக்களையும் அவர்களது உடமைகளையும் பாதுகாக்க வேண்டும் என்றார் அவர்.
கூட்டத்தில், மாநகராட்சி ஆணையர் அல்பி ஜான் வர்கீஸ், மாவட்ட வருவாய் அலுவலர் மு. வீரப்பன், சார் ஆட்சியர் பிரசாந்த், உதவி ஆட்சியர் (பயிற்சி) அனு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன், இணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) பரிதா ஜெரின், கோட்டாட்சியர்கள் கோவிந்தராசு (திருச்செந்தூர்), விஜயா (கோவில்பட்டி) மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments