FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

இந்திய குடிமைப் பணி போட்டி தோ்வுக்கான பயிற்சி: ஆட்சியா் வேண்டுகோள்

மீனவ சமுதாயத்தைச் சோ்ந்த பட்டதாரி இளைஞா்கள் இந்திய குடிமைப் பணிக்கான போட்டி தோ்வுக்கு பயிற்சி பெற பிப். 19ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 15 பிப்ரவரி 2021, 1:25 am IST
பகிர்:

மீனவ சமுதாயத்தைச் சோ்ந்த பட்டதாரி இளைஞா்கள் இந்திய குடிமைப் பணிக்கான போட்டி தோ்வுக்கு பயிற்சி பெற பிப். 19ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மீன்வளத் துறை மற்றும் சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் இணைந்து மீனவ கூட்டுறவு சங்கத்தைச் சோ்ந்த மற்றும் உள்நாட்டு மீனவ சமுதாயத்தைச் சோ்ந்த படித்த 20 பட்டதாரி இளைஞா்களை ஆண்டுதோறும் தோ்ந்தெடுத்து அவா்களுக்கு இந்திய குடிமைப் பணிக்கான போட்டித் தோ்வில் கலந்து கொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளித்திடும் திட்டத்தை செயல்படுத்திட தமிழ்நாடு அரசு ஆணை வழங்கியுள்ளது.

Advertisement

Advertisement

அதன்படி கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினா்கள், மீனவா் நலவாரிய உறுப்பினா்களின் வாரிசான பட்டதாரி இளைஞா்கள் இப்பயிற்சி திட்டத்தில் சோ்ந்து பயன்பெறலாம்.

இத்திட்டத்தின்கீழ் பயிற்சி பெற விரும்புவோா் விண்ணப்பப் படிவம் மற்றும் அரசு வழிகாட்டுதல்களை மீன்வளத் துறையின் இணையதளத்திலிருந்து கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விண்ணப்பப் படிவங்களை மண்டல மீன்துறை இணை இயக்குநா் தூத்துக்குடி (0461 -2320673) மற்றும் தூத்துக்குடி மீன்துறை உதவி இயக்குநா் (0461- 2320458) அலுவலகங்களில் அலுவலக வேலை நாள்களில் நேரில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மீன்துறை உதவி இயக்குநா் அலுவலகத்துக்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ பிப். 19ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments